சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான தேக் பகதூர் சீக்கிய சிங்கங்களை வழிநடத்திய இன்னொரு சிங்கம்..
துருக்கர்களை கண்டு அஞ்சாமல் உங்கள் சமூக தர்ம பணிகளை செய்யுங்கள் என்று இவர் குரலெழுப்ப அவுரங்கசீப்புக்கு உடல் சூடாக தொடங்கியது..
அந்த உஷ்ணத்தை அதிகரிக்க காஷ்மீரில் நடந்த படுகொலைகளையும் மதமாற்றங்களையும் எதிர்த்ததோடு காஷ்மீர் இந்துக்களுக்கு பாதுகாப்பையும் அடைக்கலமும் கொடுக்க சொன்னார் தேக் பகதுர்.
பேச்சுவார்த்தைக்கு அவரை டில்லி வரவழைத்த அவுரங்கசீப் அவரை கைதுசெய்து மதம்மாற வற்ப்புறுத்தினான் .
அடி, உதை என்று எத்தனை சித்திரவதை செய்தாலும் சிங்கங்களை மதம் மாற்ற முடியவில்லை .
இவரை ஒரு கூண்டில் அடைத்து உடன்வந்த பாய் மதிதாஸ் என்பவரை இவர் பார்க்கும்படி துண்டு துண்டாக வெட்டினர் .
இன்னொருவரை சுடு தண்ணீரில் மூழ்கடித்து கொன்றனர்.
அப்படியும் மதம் மாறாததால் 1675 நவம்பர் 24 அன்று சாந்தினி சௌக்கில் தேக் பகதூர் தலை சீவப்பட்டது ...
விளைவு.............
சீக்கியர்கள் இன்னும் ஆவேசமாக அங்கங்கே மொகலாய படைகளை வேட்டையாட தொடங்கினர்.
பஞ்சாப் மால்வா பகுதிகளில் மொகலாயர்கள் சத்திரங்களில் தங்ககூட ..முடியாத நிலை வந்தது ...