Friday, 4 October 2019

காம எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

சுவாமி சுபோதானந்தர் வாழ்வில் 

(ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்)


பக்தர் ஒருவர் சுவாமிகளிடம்,”காம எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?”என்று கேட்டார்.அதற்கு அவர் “கிழக்கு திசையை நோக்கி எவ்வளவு தூரம் நடக்கிறாயோ அவ்வளவு தூரம் மேற்கு திசையைவிட்டு விலகிவிடுகிறாய்.காம எண்ணங்கள் தோன்றுவதை நினைத்துப் பெரிதாக வருந்தாதே.இறைவனை நோக்கி முன்னேற ஆரம்பி.சிறிது நாள் கழித்து அவையெல்லாம் உன்னை அறியாமலேயே உன் மனத்திலிருந்து நீங்கி விடுவதை உணர்வாய்.தேவியின் அருள் கிடைக்காமல் ஒன்றும் நடக்காது.அவளிடம் முழுவதும் சரணடைந்துவிடு.கருணை உள்ளம் கொண்டு அவள் உன்னிடம் தோன்றுகின்ற பலவீனமான எண்ணங்களை நீக்கி அருள்புரிவாள்.நீயும் காமத்தின் பிடியிலிருந்து விடுபடுவாய்” என்று பதில் கூறினார்.
…சுபோதானந்தர் விருந்திற்கு சென்றார்.ஆனால் அந்த பக்தர் சொன்னதற்கு மாறாக விதவிதமான உணவு வகைகளைப் பரிமாறினார்.சுபோதானந்தர் அதில் எதையும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை .அவர் வெறும் அரிசிச் சோறும்,பருப்புக் குழம்பும் மட்டுமே உண்டார்.சுவாமிகள் அந்த பக்தரிடம், “சத்தியத்தைக் காப்பாற்றுவது,சொன்னபடி நடப்பது— இவை குருதேவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை” என்று கூறினார்.


கடவுளுடன் வாழ்ந்தவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம். 


No comments:

Post a Comment