Monday, 17 August 2020

முன்னோடிகள்

 ‘உண்மை, நன்னடத்தை, நல்லெண்ணம் ஆகியவற்றை மையமாக வைத்து நான் ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவ தீர்மானித்திருக்கிறேன். அதற்கான இடத்தையும் தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன்’ என்று யூனானை சேர்ந்த வயதான தத்துவஞானி ஒருவர் தன் நண்பனிடம் கூறினார்.

  அதற்கு அவர் நண்பர், 'அப்படியானால் ஆடுகளை வாங்கி அதை உங்கள் மாணவர்களாக்கி, அதற்கு இந்த பாடங்களை எல்லாம் சொல்லிக் கொடுங்கள்’ என்று கேலியாகக் கூறினார்.

      தத்துவஞானி அதைப் பொருட்படுத்தாமல், பள்ளிக்கூடத்தை நிறுவினார். இரண்டு மாணவர்கள் மட்டுமே அப்பள்ளியில் சேர்ந்தனர். அந்த பள்ளியை பற்றி அறிந்த சிலர், தத்துவஞானியை பித்தன் என நினைத்தனர்.

    இதைப் போன்ற கூரிய அம்புகள் அவரை தன் பாதையிலிருந்து சற்றும் விலக்கவில்லை. காலம் கடந்தது.

  அவ்விரு மாணவர்களின் படிப்பும் முடிந்தது. படிப்பில், அறிவில், நன்னடத்தையில் மிகச் சிறந்தவர்களாக அவர்கள் விளங்கினர். சத்யமும் விவேகமும் கொண்டு திகழ்ந்தனர்.

 அவர்கள் சொல்வதும் செய்வதும் ஒன்றாகவே இருந்தன. இதைக் கண்ட மக்கள், தத்துவ ஞானியின் முன்னால் தலை வணங்கினர். பள்ளிக்கூடம் வளர்ந்தது. பல்கலைக் கழகமாக மாறியது.

  இரண்டு மாணவர்களில் ஒருவன் யூனானின் சேனானியாகவும், மற்றொருவன் செயலாளராகவும் இருந்தார்கள்.

    இப்படி ஒரு அருமையான பள்ளிக் கூடத்தை நிறுவியவர் யார் தெரியுமா? அவரின் பெயராலேயே ஜூனோ பல்கலைக்கழகம், உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகமாக இன்று விளங்கிக் கொண்டிருக்கிறது

காந்தி கூறிய மருத்துவம் தர்மம்

காந்திஜியைக் காண, 75 வயது மதிக்கத்தக்க, ஒரு வயதான, நோய்வாய்ப்பட்ட பெண்மணி வந்திருந்தார். அவரின் நிலையை அறிந்த காந்திஜி, தனது மருத்துவரிடம் அப்பெண்மணிக்கு, வேப்பிலையைக் கசக்கிப் பிழிந்து அச்சாரையும், மேற்கொண்டு குடிப்பதற்கு மோரும் கொடுக்குமாறு கூறினார்.

 உடனே மருத்துவர் அப்பெண்மணியை நோக்கி, தாங்களே மோர் எடுத்துக் குடிக்குமாறு கூறினார்.

    மறுநாள் காந்திஜி மருத்துவரிடம், நேற்று அப்பெண்மணி எவ்வளவு மோர் குடித்தார்? என்று கேட்டார். மருத்துவரால் பதில் கூற முடியவில்லை. அதனை அறிவதற்காக அவர், அப்பெண்மணியின் வீட்டிற்கு சென்றார். மருத்துவரிடம் அப்பெண்மணி, தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் தான் மோர் குடிக்கவில்லை என்று கூறினார்.

   காந்திஜி அனைத்து விஷயத்தையும் அறிந்து கொண்டு மனக்கவலை கொண்டார். மருத்துவரிடம், “வெளிநாட்டில் நீங்கள் என்ன படித்தீர்கள்? இப்பொழுது கூட நீங்கள் அப்பெண்மணிக்கு மோர் வாங்கி கொடுக்கவில்லை. நீங்கள் அக்கிராம மக்களிடமிருந்தாவது மோர் வாங் அப்பெண்மணிக்கு கொடுத்திருக்க வேண்டும்; அப்பெண்மணியின் அழுகையைப் போக்காமல் இங்கு வந்து என்ன பயன்?” என்றார்.

      பிறகு காந்திஜி, “மருத்துவம் என்பது தர்மம் நிறைந்த செயல் என்று வெறுமனே மருந்து எழுதிக் கொடுப்பதும், அளவைச் சொல்வதும் மட்டுமல்ல, நோயாளி குணமாகும் வரை அவரைப் பார்க்கும் பொறுப்பும் மருத்துவருடையதே" எனக் கூறினார்.

ஒவ்வொரு வீடும் ஒளிமயமாகிட


ஒவ்வொரு வீடும் ஒளிமயமாகிட
    தீபமாலையாய் ஆகிடுவோம்
மெளன தவசியாய் சாதகனாகி
   இமயப் பனிபோல் உருகிடுவோம்

புத்தெழுச்சியின் கீதமாகியே
  புதிய திருப்பம் தந்திடுவோம்
துணிவும் தீரமும் நெஞ்சினில் தாங்கி
  புதிய சக்தியின் சிகரம் காண்போம்
சங்க சக்தியின் முழக்கம் கேட்டே,
  அசுர சக்திகள் அழிந்தொழியும்.  (மெளன)

பிறர் நலம் பேணும் லட்சியத்துடனே
  பிறர் துயர் துடைத்தே வாழ்ந்திடுவோம்
தூய்மையும் உறுதியும் மனதில் நிறைந்தே
  அன்பு பொழிந்தே வாழ்ந்திடுவோம்.
நிராசை இருளும் சூழ்ந்த கடலிலே
  படகாய் வந்தே காத்திடுவோம்   (மெளன)

பக்தி உணர்வே மக்களின் சக்தி
  வழிவழியாய் வரும் செல்வமிது
பாரதத் தாயின் பாத மலர்களை
  பாடிப் புகழ்ந்தே வணங்கிடுவோம்
மக்கள் வாழ்வில் இரண்டற இணைந்தே
  சங்க உணர்வை வளர்த்திடுவோம்.  (மெளன)

சாணக்கியர் கூறியது

ஒரு சத் சங்கம் தீயோரிடத்தில் நல்ல விளைவுகளை உண்டாக்கும். ஆனால் தீய அல்லது தீயோர் சகவாசம் உயர்ந்தோரிடம் தீய குணத்தை ஏற்படுத்துவதில்லை. மண் மட்டுமே மலர்களின் நறுமணத்தை ஏற்கிறது. நறுமணம் மண்ணின் வாசத்தை ஏற்க மறுக்கிறது.

சுவாமி விவேகானந்தர் கூறியது


இந்த மூன்று விஷயங்கள் நமக்கு முக்கியமாக வேண்டும். உணர்வதற்கான இதயம், சிந்தனை திறன் உள்ள மூளை, மற்றும் வேலை செய்யக்கூடிய கைகள்.



ஹிதோபதேசம்

विद्या ददाति विनयं विनयाद्याति पात्रताम् ।
पात्रत्वाध्दनमाप्नोति धनाध्दर्मं ततः सुखम् ।।

வித்யா ததாதி வினயம்
வினயாத் யாதி பாத்ரதாம் |
பாத்ரத்வாத் தனமாத்னோதி
தனாத் தர்மம் தத: ஸுகம் ||


பொருள்:

கல்வியறிவு பணிவைத் தருகிறது; பணிவினால் தகுதி உண்டாகிறது; தகுதியால் செல்வச் செழிப்பு ஏற்படுகிறது; செல்வச் செழிப்பினால் நன்னடத்தையும், நன்னடத்தையால் சுகமும் மன நிறைவும் ஏற்படுகின்றன.

திருக்குறள்

அறிவுஅற்றம் காக்கும் கருவி பேறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண்.

பொருள்:
அறிவு என் து அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மற்றும் ரகவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (சகாட்ரடயும்) ஆகும்.