செய்ந்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
தான் ஓர் உதவியும் செய்யாத நிலையில், ஒருவன் தனக்குச் செய்த உதவிக்கு, மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
செய்ந்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
தான் ஓர் உதவியும் செய்யாத நிலையில், ஒருவன் தனக்குச் செய்த உதவிக்கு, மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
நம்மாழ்வார் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை “மாறன்” என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் “சட” எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் “சடகோபன்” என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் அழைக்கப்படுகிறார்.
இறைவன் முன் குழந்தையைக் கிடத்தி, அதற்கு ‘மாறன்‘ என்னும் திருநாமத்தைச் சூட்டி, அப்பெருமானைச் சேவித்து வணங்கிப் போற்றிக் குழந்தைக்கு அருள் புரிய வேண்டினார்கள்.அக்குழந்தை தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரப்பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது.
ஆழ்வார் அவதரித்தற்கு முன்னதாக ஆதிசேடன் அப்பதியின் திருக்கோயிலின்கண் ஒரு புளிய மரமாய்த் தோன்றி விளங்கலானான். உலகம் உய்ய அவதரித்த ஆழ்வாருக்குத் திருமகள் நாதன் ஞானமாகிய அமுதத்தை ஊட்டியருளிச் சென்றனன். அதனால் ஆழ்வார் உலகத்தில் பிறக்கும் குழந்தைகளின் செயலினின்றும் வேறுபட்ட நிலையில் வைகுந்தவாசனின் திருவடிகளையே தமது திருவுள்ளத்தில் கொண்டிருப்பாராயினார். இதனை அறியாத பெற்றோர்களின் வருத்தம் எல்லை கடந்ததாயிற்று.
வைகுந்தத்த இறைவன் சேனை முதலியாரை நோக்கி, ‘மாறானாகிய நம்மாழ்வாருக்கு உண்மைப் பொருள்களை யெல்லாம் உபதேசித்து வருவீராக’ எனப் பணிக்க, அங்ஙனமே அவர் திருக்குருகூருக்குச் சென்று பிறர் அறியாதபடி ஆழ்வாருக்குத் தத்துவப் பொருள்களை உபதேசிக்க, ஆழ்வார் அக்கோயிலின் கண் உள்ள புளிய மரத்தின் அடியிலே பதினாறு ஆண்டுகள் வரையிலும் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.........
அதே போல இந்த புளியமரத்தில் அடியில்தான் நாதமுனிகள் கண்ணிநுன் சிறுதாம்பு 12000 முறை ஓதி நம்மாழ்வார் தரிசனம் பெற்றார்.
"மொத்தமும் தேவையில்லை.
அதில் இரண்டே இரண்டு சொட்டுக்கள் போதும்..."
--என்று அவர் கூறியதை உலகம் அதிசயம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தது.
அது எப்படி இரண்டே இரண்டு சொட்டுகள் போதும் என்கிறார் அவர்?
-- என மருத்துவ உலகம் கேள்விகளோடு தயாராக இருந்தது.
அவர் தரப்போகும் அந்த இரண்டு சொட்டுக்களுக்காக ஒட்டு மொத்த உலகமே காத்திருந்தது.
ஏப்ரல் 12, 1955.
ஒட்டு மொத்த உலகமே இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தது.
ஒரு மருத்துவர் தனது இரண்டு சொட்டுக்கள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடப் போகின்றார்.
அவரது அந்த ஆராய்ச்சி முடிவுகளுக்காகத் தான் ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.
மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைமை மருத்துவரான டாக்டர்.தாமஸ் பிரான்சிஸ் மேடையில் ஏறி மைக்கின் முன் வந்து நிற்கிறார்.
அவர் பேசப்போகும் வார்த்தைகளை எதிர் நோக்கி ஒட்டு மொத்த உலகமே எதிர்பார்ப்பில் அப்படியே உறைந்து நிற்கிறது,
"நீண்ட காலமாக மனித குலம்-நடத்தி வந்த யுத்தம் இதோ இன்றோடு முடிவுக்கு வருகிறது.
ஆராய்ச்சி முடிவுகள் மிகச் சாதகாமான விளைவுகளைத் தந்துள்ளன.
இந்த வேக்சின் அருமையான முடிவுகளைத் தந்துள்ளது.
பலதரப்பட்ட சோதனைகளைச் செய்து பார்த்து விட்டோம்.
அனைத்து சோதனைகளிலும் சாதகமான பலன்களே வந்துள்ளது.
இந்த வேக்சின் முழுப் பாதுகாப்பானது.
இந்த வேக்சின் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.
இதை கண்டுபிடித்த நம் பல்கலைக்கழகத்தின் "அந்த மருத்துவர்" தனக்கு எந்தக் காப்புரிமையும் வேண்டாமென மறுத்து விட்டார். எனவே இன்றில் இருந்து இந்த மருந்து முழுக்க முழுக்க இலவசமாகத் தரப்படுகிறது"
என்று பரபரப்பாக அறிவிக்கிறார்.
அவர் அறிவித்து முடித்து மேடையை விட்டு இறங்கிய அடுத்த நொடி,
பெருத்த ஆரவாரம் எழுந்தது.
மக்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு கண்ணீர் விடுகின்றனர்.
தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் கூட ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டு--
மௌன மரியாதை தரப்படுகிறது.
எதற்காக?
"அந்த ஒரு மனிதருக்காக.."
பத்திரிக்கைகளும், புகைப்படக்காரர்களும் அந்த மனிதரை அந்த மருத்துவரை மொய்த்துக் கொண்டு, பல கேள்விகளைக் கேட்டார்கள். அனைத்திலும் பிரதானமாக அமைந்த கேள்வி...
"நீங்கள் ஏன் இந்த வேக்சினுக்கு காப்புரிமையைப் பெறவில்லை,
பெற்றிருந்தால் ட்ரில்லியன்களில் பணம் வந்திருக்குமே?"
என்பது தான்.
இப்படிபட்ட ஒரு மாமருந்தை கண்டுபிடித்துவிட்டு, அதை காப்புரிமை செய்யாமல் இலவசமாகத் தந்துள்ளாரே. இதை மட்டும் இவர் காப்புரிமை செய்து இருந்தால் இந்த மனித இனம் உள்ள மட்டும் இவருக்கு பணம் கொட்டிக் கொண்டிருக்குமே... இவர் ஏன் அப்படி செய்யவில்லை.... என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.
எனவே ஒருமித்த குரலில் அந்த ஒரே ஒரு கேள்வியை மட்டுமே எல்லோரும் கேட்டனர்.
அமைதியான சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்த அந்த மருத்துவர்,
"காப்புரிமையா?
இதற்கா?
எனக்கா?
உலகத்திற்கு ஆற்றலைத் தரும் சூரியன் அதற்காக காப்புரிமையைப் பெற்றுள்ளதா?"
என்று மட்டும் சொல்லிவிட்டு தனது அடுத்த பணிக்கு சென்றுவிட்டார்.
விக்கித்து திகைத்து அதிசயித்து நின்றது உலகம்.
அதுமட்டுமல்ல, அக்காலக் கட்டத்தில் வைரஸ் கிருமியால் பரவும் நோய்களுக்கு லைவ் வைரஸ்களைக் கொண்டு அதாவது உயிருடன் இருக்கும் வைரஸ்களைக் கொண்டு தான் வேக்சின்களைத் தயாரிப்பார்கள்.
அதாவது உயிருள்ள ஆனால் பலவீனமாக்கப்பட்ட வைரஸை உடலில் செலுத்தி உடலின் நோயெதிர்ப்பு சக்தி அந்த வைரசிற்கு எதிராக போராடும் வல்லமையை, ஆண்டிபாடிகள் வடிவில் உடலைப் பெற வைப்பார்கள்.
எனவே பிற்காலத்தில் நிஜமான வைரஸ் தாக்குதல் வந்தால்,
இவனைத் தான் நாம ஏற்கனவே அடிச்சுருக்கோமே என்று உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறன் அந்த நோயை விரட்டி விடும்.
ஆனால், அந்த மருத்துவர் பயன்படுத்தியது இறந்த வைரஸ்களை. வைரஸ்களை ஆய்வகத்தில் வளர வைத்துபின் அதில் பார்மால்டிஹைடு வேதிபொருளை செலுத்த, அந்த வைரஸ்கள் முற்றிலும் செயலிழந்து போகும். பின் அந்த செயலழிந்த வைரஸ்களை உடலின் செலுத்தினால்-- உடல் வழக்கம் போல ஆண்டிபாடிகளை உருவாக்கும். இதையும் அவர் காப்புரிமை செய்யவில்லை.
இப்படி மருத்துவ உலகின் மாபெரும் புரட்சிகளை செய்து விட்டு, அதை இலவசமாக மனித குலத்திற்கு அர்ப்பணித்துவிட்டு அமைதியாகத் தன் அடுத்த பணியைப் பார்க்க சென்ற,
அவர்தான் மருத்துவர் "ஜோன்ஸ் சால்க்."
அவரால் இரண்டே இரண்டு சொட்டில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த நோய்--"போலியோ"...
நம்மாழ்வார் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை “மாறன்” என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் “சட” எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் “சடகோபன்” என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் அழைக்கப்படுகிறார்.
இறைவன் முன் குழந்தையைக் கிடத்தி, அதற்கு ‘மாறன்‘ என்னும் திருநாமத்தைச் சூட்டி, அப்பெருமானைச் சேவித்து வணங்கிப் போற்றிக் குழந்தைக்கு அருள் புரிய வேண்டினார்கள்.அக்குழந்தை தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரப்பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது.
ஆழ்வார் அவதரித்தற்கு முன்னதாக ஆதிசேடன் அப்பதியின் திருக்கோயிலின்கண் ஒரு புளிய மரமாய்த் தோன்றி விளங்கலானான். உலகம் உய்ய அவதரித்த ஆழ்வாருக்குத் திருமகள் நாதன் ஞானமாகிய அமுதத்தை ஊட்டியருளிச் சென்றனன். அதனால் ஆழ்வார் உலகத்தில் பிறக்கும் குழந்தைகளின் செயலினின்றும் வேறுபட்ட நிலையில் வைகுந்தவாசனின் திருவடிகளையே தமது திருவுள்ளத்தில் கொண்டிருப்பாராயினார். இதனை அறியாத பெற்றோர்களின் வருத்தம் எல்லை கடந்ததாயிற்று.
வைகுந்தத்த இறைவன் சேனை முதலியாரை நோக்கி, ‘மாறானாகிய நம்மாழ்வாருக்கு உண்மைப் பொருள்களை யெல்லாம் உபதேசித்து வருவீராக’ எனப் பணிக்க, அங்ஙனமே அவர் திருக்குருகூருக்குச் சென்று பிறர் அறியாதபடி ஆழ்வாருக்குத் தத்துவப் பொருள்களை உபதேசிக்க, ஆழ்வார் அக்கோயிலின் கண் உள்ள புளிய மரத்தின் அடியிலே பதினாறு ஆண்டுகள் வரையிலும் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.........
அதே போல இந்த புளியமரத்தில் அடியில்தான் நாதமுனிகள் கண்ணிநுன் சிறுதாம்பு 12000 முறை ஓதி நம்மாழ்வார் தரிசனம் பெற்றார்.
செய்ந்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
தான் ஓர் உதவியும் செய்யாத நிலையில், ஒருவன் தனக்குச் செய்த உதவிக்கு, மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
இனியவைகூறல்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
மெய்யுணர்ந்தார் வாய்ச் சொற்கள் இன்சொற்களாம். அவை அன்பு கலந்து வஞ்சனை இல்லாதனவாகும்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும். எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ, அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே
அவர்கள் மதிக்கப் படவில்லையோ, அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும்
குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.
ஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.
பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.
18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார்
ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்றார், பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார். 1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார்.
ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார். காளையர் கோவில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.
திடீர் தாக்குதலில் மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.
கணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.
அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்து தப்பினார்.
விஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.
வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.
அதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.
1780-ம் ஆண்டு ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது.
வேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது
1755ஆம் ஆண்டு கர்னல் எரோன் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்யைனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1767 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.
சோழவள நாட்டின் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கிய உரையூரில் கி.பி.8ம் நூற்றாண்டில் காத்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் பாணர் என்ற இசை வழிபாடு செய்யும் குலத்தில் அவதரித்தார்.
ஸ்ரீமந் நாராயணனின் மார்பில் இருக்கும் ஸ்ரீவத்ஸம் என்கிற மருவின் அம்சமாக விளங்குகிறார். தீண்டத் தகாத குலத்தில் பிறந்தவர் என்று கருதப் பட்டதால் காவிரியைக் கடந்து அரங்கத்தம்மானைக் கண் குளிரக் காண முடியவில்லையே என்று வருந்தி, காவிரியின் அக்கரையில் நின்ற படியே திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தவமிருந்தார்.
தினசரி திருமஞ்சனம் செய்யும் உலோக சாரங்க முனிவரின் கனவில் தோன்றிய எம்பெருமான், அக்கரையில் தவமிருக்கும் திருப்பாணாழ்வாரை பட்டரின் தோளில் சுமந்து வரச்செய்து அவருக்குக் காட்சியளித்தார். தான் கண்ட காட்சியில் உள்ளம் நெகிழ்ந்து அரங்கனின் திருவடி தொடங்கி திருமுடி வரை வர்ணிக்கும் 10 பாசுரங்களைப் பாடினார்.
ஆண்டாளைப் போலவே அரங்கனிடம் அன்பு வைத்து அவனையே நினைந்து எம்பெருமானுடன் கலந்தார் என்பது புராண வரலாறு. தம் பாசுரங்களில் மனிதர்கள் எப்படி பக்தி மார்க்கத்தில் வாழ வேண்டும் என்ற முறைகளையும், பெருமானிடம் சரணாகதி அடைவதன் அவசியத்தையும் அழகாகப் பாடியுள்ளார்
ஆன்மீகம் தழைத்து வந்த பாண்டிய நாட்டில் திருக்கோவூர் என்ற தலத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டில் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் கூடிய நாளில் அவதரித்தார்.
நம்மாழ்வார் பிறப்பதற்கு முன் அவதரித்திருந்தாலும், நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் எனலாம். சிறு வயதிலிருந்தே ஸ்ரீமந் நாராயணனிடம் பக்திகொண்டு பரமனைப் போற்றிப் பாடிவந்தார். வடமொழிப் புலமையும் கொண்டிருந்தார்.
ஒருநாள் பூஜைகள் நடத்திய பின்பு காட்டுத் தீயோ என்று எண்ணும் படியான பெரிய ஒளியைக் கண்டார். அந்த ஒளி நட்சத்திரமாக இவரைத் தெற்கு நோக்கி அழைத்து வந்தது. திருநகரி என்ற ஊரில் சென்று மறைந்தது. அங்கு கோயிலில் மரத்தடியில் 16 வருடங்களாகக் கண் மூடிய நிலையில் தவமிருந்த நம்மாழ்வாரைப் பற்றிக் கேள்விப் பட்டார். தம் அறிவுக் கூர்மையால் பேசாதிருந்த நம்மாழ்வாரைக் கண்திறக்கவும், பேசவும் வைத்தார்.
நம்மாழ்வாருடைய தத்துவ விளக்கங்களைக் கேட்டறிந்து தலை மேல் கரம் குவித்து "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற பாசுர பாமாலை பாடி நம்மாழ்வாரையே தம் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார். அவரிடமிருந்து வேதங்களைக் கற்று பரமனின் திருவடிகளே சரணம் என்று பாசுரங்கள் பாடி மகிழ்ந்தார்.
ஆலயத்தினுள்ளே நம்மாழ்வாரின் சிலை ஒன்றையும் நிறுவி ஸ்ரீமந் நாராயணனுக்கும், தம் ஆன்மீக குருவிற்கும் தினசரி பூஜைகள் செய்தும் பாசுரங்கள் பாடியும் பரமனை சேர்ந்தார்.
இந்த தாய்நாடு நமது அன்னை. அவள் ஷக்தி வடிவமனவள். ஆதிசக்தி, உலகத்திற்கே தாயாக விளங்குபவள். வெறும் கல் மண் அல்ல. ஆகவே அவளை வழிபடுகின்றோம். இவள்
நம்முடைய வணங்கத்தக்க தெய்வமாக இருக்கின்றாள்.
சுவாமி சுபோதானந்தர் வாழ்வில்
(ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்)
பக்தர் ஒருவர் சுவாமிகளிடம்,”காம எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?”என்று கேட்டார்.அதற்கு அவர் “கிழக்கு திசையை நோக்கி எவ்வளவு தூரம் நடக்கிறாயோ அவ்வளவு தூரம் மேற்கு திசையைவிட்டு விலகிவிடுகிறாய்.காம எண்ணங்கள் தோன்றுவதை நினைத்துப் பெரிதாக வருந்தாதே.இறைவனை நோக்கி முன்னேற ஆரம்பி.சிறிது நாள் கழித்து அவையெல்லாம் உன்னை அறியாமலேயே உன் மனத்திலிருந்து நீங்கி விடுவதை உணர்வாய்.தேவியின் அருள் கிடைக்காமல் ஒன்றும் நடக்காது.அவளிடம் முழுவதும் சரணடைந்துவிடு.கருணை உள்ளம் கொண்டு அவள் உன்னிடம் தோன்றுகின்ற பலவீனமான எண்ணங்களை நீக்கி அருள்புரிவாள்.நீயும் காமத்தின் பிடியிலிருந்து விடுபடுவாய்” என்று பதில் கூறினார்.
…சுபோதானந்தர் விருந்திற்கு சென்றார்.ஆனால் அந்த பக்தர் சொன்னதற்கு மாறாக விதவிதமான உணவு வகைகளைப் பரிமாறினார்.சுபோதானந்தர் அதில் எதையும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை .அவர் வெறும் அரிசிச் சோறும்,பருப்புக் குழம்பும் மட்டுமே உண்டார்.சுவாமிகள் அந்த பக்தரிடம், “சத்தியத்தைக் காப்பாற்றுவது,சொன்னபடி நடப்பது— இவை குருதேவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை” என்று கூறினார்.
கடவுளுடன் வாழ்ந்தவர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்.
நெடுநோக்குப் பார்வையோடு வெறும் 25 அல்லது 50 ஆண்டுகளுக்கு மட்டும் அல்ல, எதிர்வரும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் நமது நிரந்தரமான சிந்தனைக்கேற்றபடி வளமும், செல்வ செழிப்பும், தன்மானத்துடன் கூடிய சுய கௌரவம் நிறைந்த மகிழ்ச்சி பொங்கும் தேசத்தை நிர்மாணிக்கும் திட்டத்துடன் நாம் பணிபுரியும்.
ஒப்புரவறிதல்
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
பொருள்:
உலக உயிர்களை எல்லாம் விரும்பி ஒப்புரவு செய்யும் பேரறிவுடையவன் செல்வம், குடிநீர்க் குளம் நிரம்பினால் போன்றது.
இந்த நாட்டில் ஒரே ஒரு நபராவது தன்னை இந்து என்று அழைத்துக்கொள்ளும் வரை இது இந்து ராஷ்டிரம் தான்.
புது யுகத்தை நிறுவ எங்கும்
புத்துணர் வெழுப்புவோம்
அடிமை வாழ் வொழிந்ததன்று
அன்னியன் அகன்றனன்
அன்னையைப் பிணைத்து வைத்த
சங்கிலி அறுந்தது
அன்னியரை நம்பி வாழும்
அவல் நிலை மாற்றுவோம்
(புது)
விண்ணளாவ பாரதியின்
ஆலயம் அமைத்திட
வானவர் தம் நாடு போல
பாரதத்தை ஆக்கிட
தேசபக்தி தீச்சுடரை
உள்ளம் தோறும் ஏற்றுவோம்
(புது)
பாதையிலே பாதகர்கள்
நிற்பதை உணர்ந்துள்ளோம்
வீரமைந்தர் குடிப்பிறந்தோர்
திமைகண்டு தளர்வரோ
உளந்தனிலே வலிமை யுண்டு
உணர்வினிலே திரளுவோம்
(புது)
கண்துஞ்சாக் காவலராய்க்
காத்திடுவோம் நாட்டினை
பிளவு நஞ்சு பரவும் நாட்டில்
ஒருமை அமுதம் பாய்ச்சுவோம்
நாட்டுக்காக வாழவீழத்
தியாக உணர் வூட்டுவோம்
(புது)