அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி அரும்பசி எவர்க்கும் ஆற்றி மனத்துளே பேதாபேதம் வஞ்சனை, பொய், களவு சூது சினத்தையும் தவிப்பாயாகில் செய்தவம் வேறுண்டோ? ----- வள்ளலார்
அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி அரும்பசி எவர்க்கும் ஆற்றி மனத்துளே பேதாபேதம் வஞ்சனை, பொய், களவு சூது சினத்தையும் தவிப்பாயாகில் செய்தவம் வேறுண்டோ? ----- வள்ளலார்
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெல்லாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்றிவை அருளாய் குறி குணம் ஏதும் இல்லாதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே ---- மகாகவி சுப்ரமணிய பாரதியார்
அறனறிந்து மூத்த அறிவுகையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
--திருக்குறள்பொருள்:
அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய்
உள்ள அறிவுடையவரின் நட்பைக் கொள்ளும் வகை
அறிந்து ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்
அவா இல்லார்க்கு இல்லாகும்துன்பம் அஃதுஉண்டேல்
தவா அதுமேன் மேலும் வரும்
திருக்குறள் (368) பொருள்:
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை.
ஆசை உண்டானால் எல்லாத் துன்பங்களும்
முடிவில்லாமல் இடைவிடாமல் வரும்.
அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே --- நம்மாழ்வார் திருவாய்மொழி
பொருள்:
அவரவர் தமது தமது அறிவுகளுக்குத் தோன்றிய
வகைப்படியே அந்தந்த தெய்வ வடிவங்களை
இறையவர் என அடிபணிவார்கள்; அவரவர்
தெய்வங்கள் குறையுடையவரே அல்லர்;
ஓர் இறைவரே அவரவருடைய விதிப்படியே
அடையும் படி நின்று அருள் புரிகிறார்