Tuesday, 28 June 2022

'க கர வரிசை

காக்கைக்கா காகூகை
கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா

பாட்டின் விளக்கம்

காக்கைக்கு ஆகா கூகை - காகத்திற்கு கூகையை வெல்ல முடியாது. 

கூகைக்கு ஆகா காக்கை - கூகைக்குக் காகத்தை வெல்ல முடியாது.

கோக்கு கூ காக்கைக்கு - அரசன் தன்நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பதற்கு 
கொக்கொக்க- கொக்கைப் போல, கைக்கைக்கு 
காக்கைக்கு - பகையை எதிர்த்து நாட்டைக் காப்பதற்

கைக்கு ஐக்கு ஆகா - சிறந்த அரசனாலும் முடியாமல் போய்விடும்.

 பதிவுரை: காகத்தினால் கூகையை இரவில் வெல்ல முடியாது. ஏனென்றால் காகத்திற்கு இரவில் கண் தெரியாது. கூகையால் காகத்தைப் பகலில் வெல்ல முடியாது ஏனென்றால் கூகைக்குப் பகலில் கண் தெரியாது. அதே போல, ஓர் அரசன் தன் நாட்டைப் பகைவரிடமிருந்து காக்கவேண்டுமென்றால் ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கைப் போல காத்திருக்க வேண்டும். சாதகமான சமயம் வரும்வரை பொறுத்திருக்க வேண்டும். இல்லையென்றால், பலம்பொருந்திய அரசனாலும் பகையை எதிர்த்துத் தன் நாட்டைக் காக்க முடியாமல் போய்விடும்.

Sunday, 15 May 2022

தர்மத்தாலேயே

ஆஹாரநித்ராபயமைதுனம் ச ஸாமான்யமேதத் பஷுபிர்நராணாம்
தர்மோ ஹி தேஷாம் அதிகோவிசேஷோ தர்மேண ஹீனா: பஷுபி: ஸமானா:

உணவு, உறக்கம், பயம், புணர்ச்சி இவை நான்கும் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் பொதுவானவை; தர்மத்தாலேயே மனிதன் மிருகத்தினின்றும் வேறுபடுகிறான்.

ஜெயகோஷ ஸம்ஸ்க்ருதி கா

ஜெயகோஷ ஸம்ஸ்க்ருதி கா, ஹம் ஆஜ மில் கரேங்கே |
ஹம் தர்ம கே புஜாரி, ஜக கோ ஸுகீ கரேங்கே II 

விக்ஞான் கே பரோ(ம்) மே. தே சக்தி ஸ(ம்) ஸ்க்ருதி கீ1
ஆத்யாத்ம நீவ ஹோகி, ஸம்ருத்த ஹிந்து பூ கி |
ஹம் விஸ்வ கே விபவ கீ, வ்யாக்யா நயீ லிகேங்கே
              (ஜெயகோஷ ஸம்ஸ்க்ருதி கா)

ஹம் கர்வ ஸே கஹேங்கே, ஹிந்துத்வ ப்ராண அபனா | ஸஹயத்ன ஸே ஹோ பூரா, அபனா மஹான் ஸபனா | 
யஹ ஸங்க சக்தி தைவீ, ஹம் ஸாதனா கரேங்கே II 
              (ஜெயகோஷ ஸம்ஸ்க்ருதி கா)

உலஜெ ஹுயே ஹ்ருதய கா, ஃபிர் ஹாஸ்ய லெளட் ஆயே| 
படகே ஹுயே பதிதிக கோ ஸன்மார்க ஃபிர் திக்காயேன் 
ஸேவா ஸ்வபாவ அபனா, ஹம நித்ய ஹீ ஸ்மரேங்கே |  
            (ஜெயகோஷ ஸ(ம்)ஸ்க்ருதி கா)

ஆகாஷ மே, நிநாதித், ஏகாத்ம ஸ்வர ஹமாரா |
வர்ஷோ(ம்) கீ ஸாதனா கா, ஸார்த்தக ப்ரயாஸ ஸாரா ||
ஹை த்ருஷ்டி லக்ஷ்ய பத்த பர். விஜயீ சரண தரேங்கே !|

பொருள்:

நமது பண்பாட்டின் வெற்றியை இன்று இணைந்து முழங்குவோம். அறிவியலுக்கு மேலாகப் பண்பாட்டின் சக்தி அளிப்போம். வளமையான ஹிந்து நாட்டிற்கு ஆன்மிகமே ஆதாரம். உலகத்தின் செழிப்பிற்கு புதிய விளக்கம் எல்லோரும் முயன்றே எழுதுவோம். ஹிந்துத்வம் நமது உயிர் மூச்சு என்று நாம் பெருமையுடன் கூறுவோம். நம்முடைய பெருங்கனவை நாம் நிறைவேற்றுவோம். இந்த சங்க சக்தி தெய்வீகமானது. நாம் தவம் புரிவோம். சஞ்சலமான மனதிற்குப் புன்சிரிப்பை மறுபடியும் அளிப்போம். வழி தவறியவர்களுக்கு நாம் நல்வழி காட்டுவோம். தொண்டு செய்வோரையே நாளும் சிந்தனை செய்வோம். நமது பல்லாண்டு முனைப்பினால் அர்த்தமுள்ள தவம் புரிவோம். லக்ஷியப் பாதையின் பார்வையில் வெற்றியின் அடுத்த நிலையை அடைவோம்.

திருக்குறள் - 620

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உழற்று பவர்
                                (திருக்குறள் - 620)

பொருள் : மனம் தளராது, இடைவிடாது முயற்சி செய்பவர் தமக்குத் தடையான இருக்கும் ஊழ்வினையையும் தோற்றோடச் செய்வர்.

சாணக்ய நீதி

உத் பன்ன பஷ்சா தாபஸ்ய 
புத்திர் பவதி யாத்ருஷி
தாத்ருஷீ யதி பூர்வம் ஸ்யாத்
கஸ்ய ந ஸ்யான் மஹோதயஹ

- சாணக்ய நீதி

பொருள்: ஒரு செயலை செய்வதற்கு முன் அதைப்பற்றி முழுமையாகச் சிந்தித்து அச்செயலை செய்ய முனைபவர் வெற்றி அடைவது நிச்சயம்.

சுவாமி விவேகானந்தர் கூறியது :

 ஹிந்து மதத்தை விட்டு ஒருவன் வெளியேறி வேறு மதத்தில் சேர்ந்து விடுவானேயானால், ஹிந்துக்களாகிய நமது எண்ணிக்கையில் ஒருவன் குறைந்துவிட்டான் என்பது மட்டுமல்ல, நமது எதிரிகளில் ஒருவன் அதிகமாகிறான் என்றும் ஆகிவிடும்.

சுவாமி விவேகானந்தர் கூறியது

எதை நினைக்கிறீர்களோ. அதுவாக ஆவீர்கள். உங்களை பலவீனர்கள் என்று நினைத்தால் பலவீனர்கள் ஆவீர்கள்: வலிமையானவர்களாக நினைத்தால் வலிமை மிக்கவர்கள் ஆவீர்கள். தூய்மையற்றவர்களாக எண்ணினால் தூய்மையற்றவர் ஆவீர்கள். தூய்மையானவர்களாக எண்ணினால் தூயவர் ஆவீர்கள்.

Friday, 3 September 2021

சுவாமி சிரத்தானந்தர்

சுவாமி சிரத்தானந்தர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். மாப்ளா கலவரத்தில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களைக் கட்டாயப் படுத்தி முஸ்லிம்களாக மதம் மாற்றியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மதம் மாறியவர்களை மீண்டும் ஹிந்து சமுதாயத்திற்குள் கொண்டுவருவதற்காக 'சுத்தி' இயக்கத்தை தொடங்கினார்.
இவரது தீவிரமான முயற்சியின் காரணமாக உத்திர பிரதேசதில் 18000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தாய்மதம் திரும்பினர்.

இதனைக்கண்டு பொறுக்காத காந்திஜி இவரை காங்கிரசை விட்டே நீக்கினார். 26.12.26 அன்று அப்துல் ரஷீத் என்பவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ரஷீதை போலிஸ் கைது செய்தது.
ரஷீத் நமது சகோதரன் என்று காங்கிரஸ் மானாட்டிலே நிதி திரட்டினார் காந்திஜி.

பகத் சிங்கின் தூக்கு தண்டனையை ஆயுல் தண்டனையாக மாற்ற கடிதம் எழுதுமாறு கேட்டபொழுது அதனை மறுத்துவிட்டார். வன்முறையில் ஈடுபட்ட பகத்சிங், அதற்கான தண்டனயை அனுபவிக்க வேண்டும் என்றார்.

காந்திஜியின் பரந்த மனப்பான்மையை என்னவென்று சொல்வது.

Wednesday, 11 August 2021

கிட்டூர் சென்னம்மா

கர்நாடகத்தில் பெல்காம் அருகே உள்ள ககதி கிராமத்தில் (1778)ல் பிறந்து கிட்டூர் அரசர் முல்லசர்ஜாவை மணந்து 
போர் கலைகள் பயின்று ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கடும் போரிட்டு பிரிட்டிஷாரால் சிறை பிடிக்கப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தவர் வீரத்தியாகி கிட்டூர் சென்னம்மா.

சென்னம்மா என்றால் அழகிய பெண் என்று அர்த்தம். ராஜ குடும்பத்தினர்போல சகல வசதிகளுடன் வளர்ந்தார். சமஸ்கிருதம், கன்னடம், மராட்டி, உருது மொழிகளைக் கற்றார்.
சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில்வித்தையில் தேர்ச்சி பெற்றார். துணிச்சலான வீராங்கனை என்று பெயர் பெற்றார்.

 15 வயதில் கிட்டூர் அரசர் முல்லசர்ஜாவுடன் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் பிறந்தான்.
சென்னம்மாவின் திருமண வாழ்க்கை வெகுகாலம் நீடிக்கவில்லை. 1816-ல் கணவரும் 1824-ல் ஒரே மகனும் இறந்தனர். குழந்தை இறந்தவுடன், சிவலிங்கப்பா என்ற உறவுக்கார குழந்தையைத் தத்தெடுத்து அவனுக்கு முடிசூட்டினார் சென்னம்மா.

மிகவும் செழிப்பாக இருந்த கிட்டூர் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் ஏற்கெனவே இருந்தது ஆங்கில அரசு.
 வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கூறி கிட்டூரை அபகரிக்கும் எண்ணத்திலும் இருந்தது.

 எனவே, இந்த சூழலை நல்ல வாய்ப்பு எனக்கருதி சென்னம்மாவின் தத்துப்பிள்ளை சிவலிங்கப்பாவை நாடு கடத்த உத்தரவிட்டது அன்னிய ஆங்கிலேய அரசு. ஆங்கிலேயர்களின் வரி வசூல் விஷயத்தில் அதிருப்தியாக இருந்த ராணி சென்னம்மா இந்த உத்தரவை மதிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

அதையே காரணமாக வைத்து ஆங்கிலேயர்கள் பெரும் படையுடன் வந்து கிட்டூர் ராஜ்ஜியத்தை முற்றுகையிட்டனர். மிகப்பெரிய பெரிய போர் மூண்டது. மிகவும் துணிச்சலுடனும் தீரத்துடனும் ராணி சென்னம்மா போரிட்டார். ஆங்கிலேயப் படையில் உயிர்ச்சேதம் அதிக அளவில் ஏற்பட்டது. 2 முக்கிய அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

சென்னம்மாவை நேராக வெல்ல முடியாததால் ஆங்கிலேயப் படைத் தளபதி சாப்ளின், வஞ்சகமாக ராணியுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டு தன் அதிகாரிகளை மீட்டுச் சென்றான். 

ஆனால், நயவஞ்சகத்துடன் மேலும் அதிகமான படையுடன் திரும்பவும் வந்து கிட்டூரை மீண்டும் தாக்கினான். இந்த போர் 12 நாட்கள் நீடித்தது.

நவீன போர்க் கருவிகள், அதிக வீரர்கள் என்று அதிக வலிமையுடன் இருந்த ஆங்கிலேயப் படையை எதிர்த்து ராணி சென்னம்மாவின் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், முயற்சியை விடாமல் தீரமாக தொடர்ந்து போராடிய சென்னம்மா சிறைபிடிக்கப்பட்டார். பைல்ஹோங்கல் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.

ராணியிடம் மிகுந்த விசுவாசம் கொண்ட தளபதி சங்கொலி ராயண்ணா, அவரை விடுவிக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆங்கிலேயருக்கு எதிராக கொரில்லா முறையில் தொடர் தாக்குதல்கள் நடத்தினார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. அவர் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

 புனித நூல்களைப் படித்தும், பூஜைகளில் ஈடுபட்டும் ராணி தனது சிறை வாழ்வைக் கழித்தார். 51-வது வயதில் சிறையிலேயே (1829) காலமானார். விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட முன்னணி வீராங்கனையாகவும், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வீரச் சின்னமாகவும் இன்றளவும் சென்னம்மா கொண்டாடப்படுகிறார்.
#ஜெய்ஹிந்த் #வந்தேமாதரம்

Wednesday, 14 July 2021

தவம்

 

அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சனை, பொய், களவு சூது
சினத்தையும் தவிப்பாயாகில்
செய்தவம் வேறுண்டோ?
   ----- வள்ளலார்

அறிவிலே தெளிவு

 

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனி அரசாணை
பொழுதெல்லாம் நினது பேரருளின் 
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் 
நிலைத்திடல் என்றிவை அருளாய்
குறி குணம் ஏதும் இல்லாதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே
  ---- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

அறம்

 

அறனறிந்து மூத்த அறிவுகையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
      --திருக்குறள்
 பொருள்: 
அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் 
உள்ள அறிவுடையவரின் நட்பைக் கொள்ளும் வகை 
அறிந்து ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்

ஆசை

 

அவா இல்லார்க்கு இல்லாகும்துன்பம் அஃதுஉண்டேல்
தவா அதுமேன் மேலும் வரும்
                          திருக்குறள் (368) 
பொருள்:
 ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை. 
ஆசை உண்டானால் எல்லாத் துன்பங்களும் 
 முடிவில்லாமல் இடைவிடாமல் வரும்.