ஞானத்திலே நமக்கு நிகருண்டோ விஞ்ஞானத்திலே நமக்கு நிகர்ண்டோ
நம் முன்னோரின் ஞானத்திற்கு எல்லைகள் உண்டோ நாம் பெருமை கொள்ள தடைகள் உண்டோ
திண்ணை அமர்ந்து வானளந்த ஞானியார் நாம்
புவியின் சுழற்சியை சொன்னானே ஆரியபட்டன்
பாஸ்கரன் தந்த கணித நுட்பம் கொண்டு உலகம் இயங்குது
சுஸ்ருதன் அன்றே உடலைப் பிளந்து அறுவை சிகிச்சை செய்தானே,
சித்தர்கள் காட்டிய மூலிகை நெறிகள் சாவா மருந்தை தந்தனவே,
உலோகக் கலவையின் உன்னத வடிவம் தில்லி இரும்புதுனே,
துருவே ஏறா தூய கலைத்திறன் சோழன் வார்க்கும் சிலையன்றோ!
கணக்கின் தந்தை போதாயனனின் கணிதச் சுவடுகள் நிறைந்தனவே,
பித்தகோரஸ் சூத்திரம் என்னும் பெயரில் உலகம் புனைந்தனவே!
கனாடன் உரைத்த அணுவின் உண்மை காலம் கடந்த பார்வையடா,
விமானம் இயக்கும் யந்திர நூல்கள் வேதப் பரப்பின் கூர்வையடா!
மறைக்கப் பட்ட அறிவின் வெளிச்சம் மீண்டும் சுடராய் எழவேண்டும்,
பாரத ஞானப் பெருமையின் உண்மை உலகறிய வேண்டும்!
No comments:
Post a Comment