புது யுகத்தை நிறுவ எங்கும்
புத்துணர் வெழுப்புவோம்
அடிமை வாழ் வொழிந்ததன்று
அன்னியன் அகன்றனன்
அன்னையைப் பிணைத்து வைத்த
சங்கிலி அறுந்தது
அன்னியரை நம்பி வாழும்
அவல் நிலை மாற்றுவோம்
(புது)
விண்ணளாவ பாரதியின்
ஆலயம் அமைத்திட
வானவர் தம் நாடு போல
பாரதத்தை ஆக்கிட
தேசபக்தி தீச்சுடரை
உள்ளம் தோறும் ஏற்றுவோம்
(புது)
பாதையிலே பாதகர்கள்
நிற்பதை உணர்ந்துள்ளோம்
வீரமைந்தர் குடிப்பிறந்தோர்
திமைகண்டு தளர்வரோ
உளந்தனிலே வலிமை யுண்டு
உணர்வினிலே திரளுவோம்
(புது)
கண்துஞ்சாக் காவலராய்க்
காத்திடுவோம் நாட்டினை
பிளவு நஞ்சு பரவும் நாட்டில்
ஒருமை அமுதம் பாய்ச்சுவோம்
நாட்டுக்காக வாழவீழத்
தியாக உணர் வூட்டுவோம்
(புது)
No comments:
Post a Comment