Tuesday, 1 October 2019

பாரதத்தாயை பணிந்து வணங்கும்

பாரதத்தாயை பணிந்து வணங்கும்
வீர மைந்தர் நாம்
அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே
தூய மலர்கள் நாம்


பேசுகிறோம் நாம் பல மொழி ஆனால்
பேதம் இங்கில்லை
வங்கள மொழியும் இன்பத்தமிழும்
எங்களதென்றிடுவோம்
கவின் மலையாளம் கன்னடம் தெலுங்கு
இந்தியும் எங்களதே


குமரி முனையிலே தவம் செய் சக்தி
இமயம் உறை ஈசன்
ராமேஸ்வரமும் காசியும் அதனை
வழிபடு பக்தர்களும்
நர்மதை கங்கை காவிரி நதியும்
ஒருமை உணர்த்திடுது


ஆயிரம் சாதிகள் நம்மில் உண்டு
ஆயின் நாம் ஒன்று
மாநிலம் பலவாய்ப் பிரிந்திருந்தாலும்
மக்கள் நாம் ஒன்று
வழிபடு தெய்வம் பலவானாலும்
அனைவருமே ஹிந்து


தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும்
தேசத்தின் நன்மைக்கே
நாட்டின் உடைமையை நாமே அழித்தால்
நஷ்டம் யாருக்கு
செய் தொழிலினிலே வேறுபட்டாலும்
யாதும் அவள் தொழிலாம்


No comments:

Post a Comment