ஹிந்து என்ற மந்திரம்
சங்கம் ஒன்றே தந்திரம்
வாய்மையே வெல்லும் தர்மமே வெல்லும்
ஹிந்து சங்க சத்தியத்தின்
சிங்கநாதம் கேட்குது
ஒற்றுமை வளர்ந்து ஓங்குது
வேற்றுமை பறந்து ஓடுது (ஹிந்து)
இமயமலை மகுடமாகுமே
குமரிமுனை பாதமாகுமே
காவிரி நீரே…கங்கை தண்ணீரே
குருதியிலே கலந்து பாயுதே
ஒற்றுமை வளர்ந்து ஓங்குதே (ஹிந்து)
காளிதாசன் கவிநயத்திலும்
பாரதியின் பாட்டுணர்விலும்
வள்ளுவன் மொழியே கீதையின் ஒலியே
ஜீவனாக மிளிர்கின்றதே
ஒற்றுமை வளர்ந்து ஓங்குதே (ஹிந்து)
கட்டபொம்மன் தன்னையளித்தான்
பகத்சிம்மன் இன்னுயிர் ஈந்தான்
ஜாலியன் வாலா அந்தமானே
சுதந்திர யாக குண்டமே
ஒற்றுமை வளர்ந்து ஓங்குதே (ஹிந்து)
கண்ணப்பனும் தன் கண் கொடுத்தான்
ததீசியும் தன்னெலும் பீந்தான்
கண்ணகி கற்பே சீதையின் தூய்மை
பண்பாட்டின் மூச்சாகுமே
ஒற்றுமை வளர்ந்து ஓங்குதே (ஹிந்து)
No comments:
Post a Comment