நம்மாழ்வார் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை “மாறன்” என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் “சட” எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் “சடகோபன்” என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் அழைக்கப்படுகிறார்.
இறைவன் முன் குழந்தையைக் கிடத்தி, அதற்கு ‘மாறன்‘ என்னும் திருநாமத்தைச் சூட்டி, அப்பெருமானைச் சேவித்து வணங்கிப் போற்றிக் குழந்தைக்கு அருள் புரிய வேண்டினார்கள்.அக்குழந்தை தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரப்பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது.
ஆழ்வார் அவதரித்தற்கு முன்னதாக ஆதிசேடன் அப்பதியின் திருக்கோயிலின்கண் ஒரு புளிய மரமாய்த் தோன்றி விளங்கலானான். உலகம் உய்ய அவதரித்த ஆழ்வாருக்குத் திருமகள் நாதன் ஞானமாகிய அமுதத்தை ஊட்டியருளிச் சென்றனன். அதனால் ஆழ்வார் உலகத்தில் பிறக்கும் குழந்தைகளின் செயலினின்றும் வேறுபட்ட நிலையில் வைகுந்தவாசனின் திருவடிகளையே தமது திருவுள்ளத்தில் கொண்டிருப்பாராயினார். இதனை அறியாத பெற்றோர்களின் வருத்தம் எல்லை கடந்ததாயிற்று.
வைகுந்தத்த இறைவன் சேனை முதலியாரை நோக்கி, ‘மாறானாகிய நம்மாழ்வாருக்கு உண்மைப் பொருள்களை யெல்லாம் உபதேசித்து வருவீராக’ எனப் பணிக்க, அங்ஙனமே அவர் திருக்குருகூருக்குச் சென்று பிறர் அறியாதபடி ஆழ்வாருக்குத் தத்துவப் பொருள்களை உபதேசிக்க, ஆழ்வார் அக்கோயிலின் கண் உள்ள புளிய மரத்தின் அடியிலே பதினாறு ஆண்டுகள் வரையிலும் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.........
அதே போல இந்த புளியமரத்தில் அடியில்தான் நாதமுனிகள் கண்ணிநுன் சிறுதாம்பு 12000 முறை ஓதி நம்மாழ்வார் தரிசனம் பெற்றார்.
No comments:
Post a Comment