தாயகத்தின் தரமுயர்த்திட
தனயர்கள் விரைந்தேகுவோம்
சங்கஸ்தானில் திறமை பயின்றே
சிங்கமெனக் களம் ஏகுவோம்
புனித குருவாம் காவிக் கொடியின்
புண்ய தரிசனம் நம்மை உயர்த்தும்
யோக ஆசனம் சூர்ய நமஸ்கார்
யோகப் பயிற்சிகள் வலிமை சேர்க்கும்
நியுத்தம் கற்றே தீரராகி
நித்தம் அன்னையின் பணியில் இணைவோம்
(தனயர்கள்)
பட்டை தீட்டிய வைரம் போலே
கட்டுப்பாட்டால் பண்பு மெருகிட
வீரம் ஞானம் உள்ள உறுதி
வெற்றி கண்டிட வேட்கையுடனே
அறிவில் தெளிவும் இனிய சொல்லும்
ஆற்றல் வளர்ந்திட தினமும் பயில்வோம்
(தனயர்கள்)
அனைவரும் நம் நண்பராகிட
அன்பு பெருகிடப் பழகி வருவோம்
நல்ல தொண்டில் தோள் கொடுத்தே
நல்லவர்கள் இணைய வைப்போம்
நமது பகுதியின் துன்பம் துடைத்தே
நாயகர் எனத் தலைமை ஏற்போம்
(தனயர்கள்)
No comments:
Post a Comment